குடியிருப்பாளர் மற்றும் குடும்ப ஈடுபாடு

உள்ளடக்கம்
மொழி

ஒன்டாரியோவின் நீண்டகால பராமரிப்பில் வசிப்பவர்கள் ஒவ்வொரு ஹோமின் இதயமாகவும் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களைப் பராமரிப்பதற்கும் மற்றவர்களை நம்பியிருக்கும் கட்டத்தை அவர்கள் அடைந்துள்ளனர், மேலும் சில குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த பராமரிப்பில் தன்னாட்சியாக இருக்க முடியாது என்றாலும், சுயமாக வாதிடவும் மருந்து மேலாண்மையில் அவர்களுக்கான தீர்மானங்களை எடுக்கக்கூடிய பலர் உள்ளனர். மருந்துப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு குடியிருப்பாளர்களை ஈடுபடுத்துவது அவசியம். இந்த முயற்சியானது, ஆதாரங்கள் மற்றும் கல்வியின் மூலமாக உங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊழியர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பாதுகாப்பான மருந்து அனுபவங்களுக்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

"எனது மருத்துவருடன் பழக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அவர் என்னுடன் இருக்கிறார். அந்த உறவு, அந்த பந்தம் மற்றும் உறவு எனக்கும் நீண்ட கால பராமரிப்பில் உள்ள பல குடியிருப்பாளர்களுக்கும் முக்கியமானதாகும்."

பேர்ரி, ஒன்டாரியோ, நீண்டகால பராமரிப்பின் வசிப்பாளர்.

"நான் குடியிருப்பாளரின் சார்பில் பேசுவதற்கு பிழைகளை எவ்வாறு குறைக்கப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் குழுவில் இருக்க விரும்புகிறேன்..."

டேவோரா, ஒன்டாரியோ, நீண்டகால பராமரிப்பின் வசிப்பாளர்.

மருத்துவ பாதுகாப்பில் உங்கள் கருத்துக்கள் முக்கியமானவை

எந்தவொரு மருந்து மேலாண்மை அமைப்பிலும் குடியிருப்பாளரின் கருத்துஒரு முக்கிய பகுதியாகும், மேலும் அவை முடிவெடுப்பதற்கும் பராமரிப்புத் திட்டமிடலுக்கும் ஒரு தனித்துவமான முன்னோக்கைக் கொண்டு வருகின்றன. குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எவ்வாறு முழுமையாக ஈடுபடலாம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு அவர்களின் உள்ளீடு ஏன் முக்கியமானது என்பதை இந்த வீடியோ விவரிக்கிறது. இந்த மாடியூல் குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அனைத்து LTC ஊழியர்களும் பார்ப்பதன் மூலம் பயனடைவார்கள்.

“மருந்துப் பாதுகாப்பில் உங்கள் கருத்து முக்கியமானது” என்ற இந்தக் கையேடு, உங்கள் குடியிருப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தரவிறக்கம் செய்யக்கூடிய வளமாக இருக்கும். நீண்ட காலப் பராமரிப்பில் இருக்கும்போது அவர்களின் சொந்த மருந்து நிர்வாகத்தில் தங்களது பங்கைப் புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு உதவமுடியும் என்பதால் இதனைப் பகிரவும். இந்த கையேட்டை அச்சிடலாம் அல்லது உங்கள் சமூகத்திற்கு மின்னஞ்சல் செய்யலாம்.

பதிவிறக்கம்

குடியிருப்பாளர் மற்றும் குடும்ப கருத்தாய்வு

வீட்டில் மருந்துகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பது குறித்த குடியிருப்பாளர் மற்றும் குடும்பக் கண்ணோட்டத்தை சேகரிப்பதற்கான ஒரு முறை ஒரு கருத்தாய்வாகும். சாம்பியன் ஹோம்ஸ்-களில் ஒன்று ISMP கனடா பபேக்கல்டியால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாய்வைப் பயன்படுத்தியது மற்றும் உள்ளூர் நுணுக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிப்புகளைச் செய்தது.

1D-ஐ பார்க்கவும்

பதிவிறக்கம்

மருந்து சார்ந்த பிழை ஏற்படும்போது

உடல்நலப் பாதுகாப்பு வழங்குநர்கள் தங்களால் இயன்றத்தைச் செய்தாலும், மருந்து சார்ந்த பிழைகள் அல்லது தவறுகள் நீண்ட கால பராமரிப்பு ஹோமில் நிகழலாம். மருந்து சார்ந்த பிழை ஏற்பட்ட பிறகு உங்கள் ஹோமில் உள்ள ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் என்ன செய்வார்கள் என எதிர்பார்க்கலாம் என்பதை அறிய_இந்த தகவலைப் படிக்கவும்.

பதிவிறக்கம்

What Matters to You (உங்களுக்கு எது முக்கியமானது)

உங்களுக்கு என்ன முக்கியம் என்பது ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும், இது சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்பங்களுடன் தங்களுக்கு என்ன முக்கியம் மற்றும் அவர்களின் சுகாதார இலக்குகளைப் பற்றி விவாதிக்க ஊக்குவிக்கிறது. வளங்கள் மற்றும் யோசனைகளுக்கு இந்த ஆவணத்தை பார்க்கவும்.

பதிவிறக்கம்

உங்கள் சிறப்பான கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

உங்கள் ஹோமில் மருந்து நிர்வாகத்தில் குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஈடுபாட்டின் சிறந்த உதாரணங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய கதைகள்